கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக ஸ்டாலின் திகழ்கிறார் என்று பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திமுகவும், பாஜகவும் ஒருவருக்கொருவர் மாறி மாறி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூரில் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்ல திருமண விழாவில் பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அவர் பேசியதாவது, கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக ஸ்டாலின் திகழ்கிறார். மு.க.ஸ்டாலினின் உழைப்பு எங்களை இன்னும் உழைக்க வேண்டும் என உணர்த்தியுள்ளது என்று பெருமையுடன் பேசியது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.