Categories
அரசியல் மாநில செய்திகள்

BJPயின் குஜராத் வெற்றி…. இந்தியாவுக்கு நல்லதல்ல…. கவலையில் திருமாவளவன் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், குஜராத் தேர்தல் முடிவு பாஜகவுக்கு சாதகமாக அமைந்து இருக்கிறது. ஆம்.ஆத்.மி கட்சி வாக்குகளை பிரித்திருக்கின்றது. அதே போல ஒவைசி தலைமையிலான கட்சியும், பிஜேபி கட்சிக்கு எதிரான வாக்குகளை சிதற வைத்திருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது என்பதை விட… எதிர்க் கட்சிகளின் வாக்குகள் சிதறி போனது என்பது தான் கவலைக்குரியது. 2024 தேர்தல் நெருங்கும் வேளையில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறாத வகையில்,  அனைத்து எதிர்கட்சிகளும்…  பாஜக எதிர்ப்பு கட்சிகளும்…  ஓரணியில் திரள வேண்டும் என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.

குஜராத்தில் அவர்கள் பெற்றிருக்க வேண்டிய வெற்றி,  நாட்டுக்கு நல்லது அல்ல. ஜனநாயகத்திற்கு இது நல்ல அறிகுறி இல்லை.  இதை அனைத்து தரப்பு பொதுமக்களும் உணர்ந்து, எதிர்காலத்தில் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகின்றது.

Categories

Tech |