Categories
தேசிய செய்திகள்

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்: 10 தொகுதிகளில் பாஜக முன்னிலை.!!

கர்நாடகாவில் நடைபெற்ற 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் 10 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

கர்நாடகாவில் நடைபெற்ற 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு டிச. 5ஆம் தேதி நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதற்கான முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர்கள் 10 தொகுதிகளிலும், காங்கிரஸ், மஜத தலா இரண்டு தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

Image

தொகுதி வாரியாக முன்னிலை விவரம்:

தொகுதிகள் : கட்சிகள்

சிவாஜி நகர் காங்கிரஸ் முன்னிலை
ஹுன்சூர் காங்கிரஸ் முன்னிலை
ஹிரேகேகூர் பாஜக முன்னிலை
ராணிபென்னூர் பாஜக முன்னிலை
மகாலெச்சுமி லேஅவுட் பாஜக முன்னிலை
கே.ஆர்.புரம் பாஜக முன்னிலை
கே.ஆர். பேட் மஜத முன்னிலை
யஷ்வந்த்பூர் மஜத முன்னிலை
சிக்பளாப்பூர் பாஜக முன்னிலை
விஜயநகரா பாஜக முன்னிலை
அத்தானி பாஜக முன்னிலை
கோகாக் பாஜக முன்னிலை
ஹொசாகொட் சுயேட்சை வேட்பாளர் பஜிகவுடா முன்னிலை
காக்வாட் பாஜக முன்னிலை
எலாபூர் பாஜக முன்னிலை

Categories

Tech |