பாராளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியான நிலையில், இன்று இந்தியப் பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியுள்ளது.
இதன் எதிரொலியாக இன்று காலையில் சென்செக்ஸ் 950 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது. இன்றைய தின வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே சென்செக்ஸ் 962.12 புள்ளிகள் உயர்ந்து , 38,892.89 புள்ளிகளிலும், நிஃப்டி 286.95 புள்ளிகள் அதிகரித்து , 11,694.10 புள்ளிகளிலும் வர்த்தகமாகியது.