Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கருகிய பருத்தி பயிர்கள்… வேதனையில் உருகிய விவசாயிகள்..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

சாத்தான்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் வடபகுதிகளில் பெய்த மழையை விட தென்தமிழகத்தில் நடப்பாண்டில் போதிய மழை பெய்யாமல் கிணறுகள் வறண்டு பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்ட பருத்தி செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Image result for கருகிய பருத்தி

தண்ணீரின்றி கருகும் பருத்தி சாகுபடி செய்த நிலங்களில் கால்நடைகளை மேய விடும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |