அல்கொய்தா பயங்கரவாத அமைப்பினர்கள் அமெரிக்காவில் நடத்திய இரட்டைக் கோபுரம் உட்பட 4 தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்கு அந்நாட்டின் தற்போதைய மற்றும் 2 முன்னாள் ஜனாதிபதிகள் ஒன்றாக சேர்ந்து தங்களது மவுன அஞ்சலியை செலுத்தியுள்ளார்கள்.
அமெரிக்க நாட்டில் அல்கொய்தா அமைப்பின் தீவிரவாதிகள் இரட்டை கோபுரம் உட்பட 4 பகுதிகளில் தாங்கள் கடத்தி சென்ற விமான பயணிகளின் மூலம் அதிபயங்கர தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இவ்வாறு நடத்தப்பட்ட அதிபயங்கர தாக்குதலினால் கிட்டத்தட்ட 3,000 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
இந்த நாளை அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி அந்நாட்டின் கருப்பு தினமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க நாட்டின் தற்போதைய ஜனாதிபதி மற்றும் 2 முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது மனைவிகளும் ஒன்றாக சேர்ந்து இரட்டை கோபுரம் உட்பட அல்கொய்தா அமைப்பினர்களால் நடத்தப்பட்ட 4 தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்கு தங்களது மௌன அஞ்சலியை செலுத்தியுள்ளார்கள்.
மேலும் பொதுமக்கள் பலரும் அல்கொய்தா அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களுக்கு சென்று மலர் கொத்தை வைத்து தங்களது அஞ்சலியை செலுத்தியுள்ளார்கள்.