சிவகங்கையில் கோரிக்கைகளை முன் வைத்து வீட்டில் கருப்பு கொடி கட்டியவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கை மேற்கு மாவட்ட செயலாளராக பசும்பொன் தேசிய கழகத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் மருதுபாண்டியர்களின் சிலையை சிவகங்கையில் வைக்கக் கோரியும், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட கோரியும் வீட்டில் அருகில் உள்ள மின் கம்பத்திலும், வீட்டின் பின்புறமும், முன்புறமும் கருப்புக் கொடியை கட்டியுள்ளார்.
திருபுவனம் வட்டத்திற்கு உட்பட்ட பூவந்தி கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். அந்தக் கருப்புக் கொடியை கண்ட முருகன் இதுகுறித்து பூவந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.