Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அவளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை..! 5 வயது சிறுமிக்கு உறுதியான பூஞ்சை… தந்தை கூறிய பரபரப்பு தகவல்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி பகுதியில் கருப்பு பூஞ்சை நோயால் 5 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த ஒரு வாரமாக கண்ணில் கட்டிபோல் இருந்துள்ளது. அது வெயிலின் தாக்கம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளனர். ஆனால் அந்த சிறுமிக்கு கண்ணில் வலியும், கட்டியும் குறையவில்லை. இதனால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமிக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அந்த சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அந்த சிறுமியின் தந்தை கூறியதாவது கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத தன்னுடைய மகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |