கரூரில் அதிக புகையைக் கக்கியபடி சென்ற ஆட்டோவை தடுத்து நிறுத்திய அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அதனை சரிசெய்து ஓட்ட அறிவுறுத்தினார்.
கரூரை அடுத்த வெண்ணை மலையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சென்று கொண்டிருந்தபோது எதிரே அளவுக்கதிகமாக புகையைக் கக்கியபடி ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது.
அதனை கவனித்த அவர் காரில் இருந்து இறங்கி அதை தடுத்து நிறுத்தினார். அதிக புகை வெளியேறுவதால் சுற்றுச்சூழல் மாசுபடும் என்றும், ஆட்டோவை முறைப்படி பாராமரிப்பு செய்து இயக்கவும் அறிவுறுத்த, ஆட்டோ டிரைவரும் சரி செய்வதாக வாக்குறுதி அளித்த பின் அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.