Categories
உணவு வகைகள் பல்சுவை லைப் ஸ்டைல்

“IMMUNITY” பாக்டீரியாவை ஓடவிடும்…. கருமிளகு….!!

கருமிளகின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்

சளி,  ஃப்ளு, கொரோனா உள்ளிட்ட வியாதிகளில்  இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள் உணவு பொருள்களை  அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில்,

கருமிளகை நாம் எடுத்து கொள்ளலாம். கருமிளகு இயற்கையில் ஆரோக்கியம் என்பதைத்தாண்டி இயல்பாகவே சுவைக்காக நாம் நம் உணவில் எடுத்துக் கொண்டு வருகிறோம். பொதுவாக இதிலுள்ள பிப்பெரின் என்ற உட்பொருள் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உண்டு. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில்  கருமிளகு மிகச்சிறந்தது.

Categories

Tech |