பிளாக் டீ அளிக்கும் ஏராளமான நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
காபிக்கு மாற்றாக சிலர் பிளாக் டீ அருந்துவது வழக்கம். இது உடல் நலத்திற்கு ஏராளமான நன்மை அளிக்கிறது. பிளாக் டீ அருந்துவதன் மூலம் உடலில் தேவையற்ற கொழுப்புகளை சேரவிடாமல் தடுக்கலாம். பிளாக் டீ இதயத்திற்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
இதைத்தவிர குளிர்ந்த பிளாக் டீ வெட்டுக்காயம் சிராய்ப்புகள் உள்ளிட்ட காயங்களுக்கு மருந்தாகவும், ரத்தப்போக்கை நிறுத்தவும் உதவுகிறது. மேலும் பிளாக் டீ ஈறுகளின் ஆரோக்கியத்தை பெருக்கி பற்களின் உறுதியை மேம்படுத்துகிறது.