Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி…. முன்னாள் ராணுவ வீரர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பிளேடால் உடலை அறுத்து முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை ஆட்சிநகர் பகுதியில் ஜெயபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இந்நிலையில் ஜெயபாலனுக்கு கடந்த சில நாட்களாக பக்கவாதம் ஏற்பட்டு உடல் நிலை மோசமானது. இதனையடுத்து ஜெயபாலன் வத்தலகுண்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின் வீடு திரும்பிய ஜெயபாலன் தனது உடல்நிலை குறித்து புலம்பியவாறு இருந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த ஜெயபாலன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கழுத்து, கை, நரம்பு உள்ளிட்ட பகுதிகளில் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சரோஜா மற்றும் மகன் ராஜா ஆகியோர் ஜெயபாலனை உடனடியாக மீட்டு நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜெயபாலன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த நிலக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |