Categories
அரசியல் தேசிய செய்திகள்

” குளறுபடியில் ஸ்டாலின் ” – அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு ..!!!

ஸ்டாலின் குளறுபடியில் உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் போன்றோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ”வீரன் அழகுமுத்துக்கோன் புகழையும் வரலாறையும் நினைவில் கொண்டு , 1991-96 ஆட்சியில் ஜெயலலிதா அவரின் சிலையை நிறுவியுள்ளார். பாளையக்காரர்கள் யாரும் ஆங்கிலேயருக்குக் கப்பம் கட்டக்கூடாது என கோரிய மாமன்னன் அழகு முத்துகோன். ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்காததால் மார்பில் சுடப்பட்டு, வீரவரலாறு படைத்தவர் இவர் எனக் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் நல்ல ஆலோசனையை வழங்கினால் கட்டாயம் செயல்படுத்துவோம். ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை போர் செய்துவருகிறார். தினமும் பொழுது விடிந்தால் போதும் உடனே அறிக்கை வெளியிட்டுவிடுகிறார். அவரது அறிக்கை உள்நோக்கம் கொண்டதாகவும் கேலியும் கிண்டலும் நிறைந்து விஷமத்தனமாக இருப்பதால் அவரின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஸ்டாலின் அறிக்கையும் பேச்சும் கட்சியும் குளறுபடியாக உள்ளது அதனால் குழப்பத்தின் உச்சம் என்றால் அது எப்போதும் திமுக தான். அவரின் பதவி வெறி ஸ்டாலினை தூங்கவிடவில்லை, தூங்காமல் இருப்பதால் பித்து பிடித்த உள்ள நிலையில் இருக்கிறார். இதனால் எதைச் செய்கிறோம் எதைப் பேசுகிறோம் என்று தெரியாமல் ஸ்டாலின் பேசிவருகிறார்” என்று ஸ்டாலின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |