Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கியாஸ் சிலிண்டர் வெடித்து இரண்டு வீடுகள் சேதம்

திருப்பத்தூர்:சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து  2 வீடுகள் தீப்பற்றி  எரிந்தது. மேலும் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி தாதன் குட்டை பகுதியில் வசித்துவரும் கூலித்தொழிலாளி அண்ணாமலை (50). இவர் வழக்கம்போல் தந்து வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்  அப்போது சமையல் கியாஸ் சிலிண்டறில் ஏற்பட்ட கசிவின் காரணமாக தீப்பிடித்துக் கொண்டது.

இதனால் பயந்த அண்ணாமலை பதறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார் .பின்னர் சிறிது நேரத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் வீடு  முழுவது தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

இதை தொடர்ந்து அண்ணாமலை வீட்டின் பக்கத்தில் உள்ள சின்னராஜ் என்பவர் வீட்டிலும் தீ பரவ ஆரம்பித்தது. தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து தீயை அணைத்தனர்.

தீ விபத்தினால் அண்ணாமலை வீட்டிலிருந்த 1.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள், சின்னராஜ் வீட்டிலிருந்த 75 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள்  தீயில் எரிந்து நாசமானது.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இச்சம்பவத்தில் அதிஷ்டவசமாக எந்த ஒரு உயிர் சேதம் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |