Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் மசூதி அருகே குண்டு வெடிப்பு…. 4 போலீசார் பரிதாப பலி…. பலர் படுகாயம்.!!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தின்  தலைநகரான குவெட்டாவில் உள்ள  சாட்டிலைட் நகரில் தொழுகைக்காக கூடியிருந்த மசூதி அருகே நேற்று இரவு சக்திவாய்ந்த வெடி குண்டு வெடித்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் சுற்றியிருந்த கடைகள், கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில்  4 போலீசார் உடல்சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர்.
Image result for A bomb blast tore through a market near a mosque in Pakistan's restive Balochistan province on
இத்தகவலறிந்து விரைந்த  ராணுவத்தினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார்  விசாரணையில், ரிமோட் கண்ட்ரோல் மூலம் குண்டு வெடிக்கச் செய்துள்ளது தெரியவந்தது. மேலும் குண்டை வெடிக்க செய்தது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாக பலுசிஸ்தானில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு  பயங்கரவாதிகள் நட்சத்திர ஓட்டலில் நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |