Categories
மாநில செய்திகள் வானிலை

வெளுக்கும் கனமழை… இந்த மாவட்டத்திற்கு எல்லாம் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்..!!

மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே பகுதியில் நீடித்துக் கொண்டுள்ளது. 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்த பகுதியாக மாறி அதே இடத்தில் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. புயலானது பாம்பன் கன்னியாகுமரி இடையே கரையைக் கடந்த நிலையில், மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக மழை தொடர்ந்து நீடித்து வருகிறது.

அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலைகொண்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் கன மழை தொடர்ந்து பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடலூர், அரியலூர், நாகை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Categories

Tech |