கொரோனா ஊரடங்கு காலம் ஐந்து அறிவுள்ள ஜீவன்களுக்கு உகந்ததாக அமைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வந்தனர். இந்த காலகட்டத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராததால் சாலைகள் மற்றும் தெருக்களில் மக்களின் நடமாட்டம் கணிசமாக குறைந்தது.மேலும் சாலைகளும் வாகனங்களின் இரைச்சலின்றி வெறிசோடி காணப்பட்டது.
இதையடுத்து பறவைகள் விலங்குகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு தான் அந்த கால கட்டம் உகந்ததாக அமைந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அவற்றின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது என்றும், வாகன இரைச்சல், மக்கள் நடமாட்டம் இன்றி சுதந்திரமாக அவை திரிந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.