நெல்லை மாவட்டத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பிரெய்லி முறையில் புத்தகம் வாசித்து உலக சாதனை படைத்தனர்.
நெல்லை மாவட்டத்தில் புத்தகத் திருவிழா கடந்த பிப்ரவரி 1ம் தேதி பாளையங்கோட்டையில் உள்ள வாஉசி மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டது பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ள இந்த திருவிழாவின் ஒரு பங்காக உலக சாதனை படைக்க தொடர் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. 520 பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு புத்தகங்களை வாசித்து வருகின்றனர். இந்நிலையில்பார்வை மாற்றுத்திறனாளிகள் இருவர் 24 மணி நேரம் தொடர்ந்து புத்தகம் வாசித்து உலக சாதனை படைத்தனர். இவர்களை மாவட்ட ஆட்சியர் சில்பா பிரபாகரன் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.