Categories
மாநில செய்திகள்

ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும்… தமிழக சுகாதாரத்துறை செயலாளர்…!!

தமிழகத்திற்கு 1.74 லட்சம் தடுப்பூசி மத்திய அரசிடம் இருந்து வரவில்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஜூன் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி போடப்படுவது நிறுத்தப்படலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி முடங்கும் அபாயம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது: தமிழகத்திற்கு இதுவரை 96.10 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் 87.70 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாளையோடு தடுப்பூசிகள் இருப்பு தீர்ந்துவிடும். மே மாதத்துக்கான தடுப்பூசி 1.74 லட்சம் டோஸ் இன்னும் வரவேண்டியதுள்ளது. 2 நாட்களுக்குள் மத்திய அரசு தடுப்பூசிகள் வழங்கினால் மட்டுமே தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும். எனவே ஜூன் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி போடப்படுவது நிறுத்தப்படலாம் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |