விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சர்க்கரை குளத்தை சேர்ந்த சுரேஷ் நெப்போலியன் என்பவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று திருவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் தமிழக சட்ட அமைச்சர் சிவி சண்முகம் ஊடகங்களில் பேட்டி அளிக்கும் போது டிடிவி தினகரன் எங்களுக்கு ஊத்தி கொடுத்தார். அவர்களது குலத்தொழில் அது, என்று தினகரன் சார்ந்த எங்களது சமூகத்தை இழிவாக பேசியுள்ளார்.
இது எங்கள் சமுதாய மக்களிடம் மனவருத்தத்தையும், இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமூகத்திடையே ஜாதி கலவரத்தை உண்டாக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தினகரன் குடும்பத்தை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லாமல் ஒட்டுமொத்த சமுதாயத்தையே இழிவுபடுத்தும் வகையில் சிவி சண்முகம் பேசியுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.