ட்விட்டரில் ஒருவரின் கணக்கு உண்மையானது என்பதை குறிக்கும் நீல குறியீடு கட்டணம் செலுத்தும் வசதியுடன் இந்தியாவில் நடைமுறைக்கு வந்திருக்கிறது.
உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மாஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் பல அதிரடி மாற்றங்களை அறிவித்தார். அதன்படி அந்நிறுவனத்தில் பணிபுரியும் பாதிக்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கிவிட்டார்.
அதனைத்தொடர்ந்து ஒருவரின் கணக்கு உண்மையானது தான் என்பதை குறிக்கக்கூடிய நீலநிற குறியீட்டை பெற வேண்டும் எனில் அதற்கு மாதந்தோறும் 719 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்திருந்தார். அதன்படி நீல குறியீடு கட்டண வசதியுடன் இந்தியாவில் நடைமுறைக்கு வந்திருக்கிறது.