நீலத்திமிங்கலம் (blue whale) தான் உலகிலேயே மிகப்பெரிய உயிரினமாகவும் சாதுவான பாலூட்டியாகவும் இருக்கிறது. இது மனிதர்களை சாப்பிடாது. இதற்கு பிடித்த உணவு கீரீல் என்ற சிறிய வகை மீன் இனம் தான். மேலும் பெண் திமிங்கலம் 2 அல்லது 4 வருடத்திற்கு ஒரு முறை ஒரு குட்டி மட்டும் போடும். அந்த குட்டி 2 டன் எடை வரைக்கும் இருக்கும். நீலத் திமிங்கலத்தின் உடலில் கொழுப்பு சக்தி அதிகமாக இருப்பதினால் அதனுடைய பால் ரொம்ப கெட்டியாக டூத் பேஸ்ட் போல் இருக்கும்.
இது மனிதர்களைப்போல் நுரையீரல் மூலம் நான் சுவாசிக்கிறது. நீலத்திமிங்கலத்தால் தண்ணீருக்குள் மூச்சுவிட முடியாது. அதனால் தண்ணீருக்கு மேல் வந்து செல்லும். ஒரு தடவை மூச்சை இழுத்த பின்பு 1.30 மணி நேரம் மூச்சு விடாமல் அதனால் இருக்க முடியும். திமிங்கலத்தில் நிறைய வகை இருக்கிறது. மேலும் அதிகமாக சத்தத்தை எழுப்பக்கூடிய உயிரினமாகவும் அதிக தூரம் பயணம் செய்யும் உயிரினமாகவும் இது இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.