Categories
அரசியல் பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“பிரச்சாரத்தின் போது பாமக விசிக இடையில் திடீர் மோதல் ” அதிர்ச்சியில் மக்கள் !!…

பிரச்சாரம் செய்யும்  வேளையில் பாமக விசிக இடையில் ஏற்பட்ட மோதல் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்  


சிதம்பரம் மக்களவை தேர்தல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இதனையடுத்து சிதம்பரம் தொகுதிகளுக்குஉட்பட்ட பகுதிகளில் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வந்தார்

நேற்றைய தினம் பெரம்பலூர் அருகே உள்ள  கிராமங்களில் பிரச்சாரம் செய்து வந்தனர். அப்பொழுது அங்கு பிரச்சாரம் செய்ய வந்த பாமகவினர், திருமாவளவன் செய்து வந்த பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊருக்குள் நுழைய அனுமதிக்காமல் தடுத்தனர்..

இது குறித்து பாமகவினர் விளக்கம் அளித்துள்ளனர் அவர்கள் கூரியதாவது  இந்த ஊரில் மயான திண்ணை அமைத்த பொழுது, திராவிட மணி என்பவர் எங்களுக்கும் அதில் பங்கு உண்டு என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  வழக்கு முடியும்வரை யாரையும் அனுமதிக்கமாட்டோம் என்றனர் மேலும் திருமாவளவனின் பிரச்சார வாகனத்தை 100-க்கும் மேற்பட்ட பாமகவினர் முற்றுகை செய்தனர். இதனால் 2 கட்சியினர் இடையே மோதல் ஏற்படும் வாய்ப்பு உருவானது.

இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று 2 தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.அதன்பின் காவல்துறையினர் பாதுகாப்புடன் திருமாவளவன் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

Categories

Tech |