ஜெர்மனியில் நடந்த சர்வதேச வாகன கண்காட்சியில், BMW நிறுவனம், 100% மறுசுழற்சி செய்யக்கூடிய புதிய வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜெர்மன் நாட்டில் உள்ள மூனிச் என்ற நகரத்தில், புதிதான தொழில் நுட்பங்களோடு வடிவமைக்கப்பட்ட சர்வதேச மின்சார வாகன கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. இதில் பிரபல BMW நிறுவனமானது, புதிதாக முட்டை வடிவமுடைய வாகனத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த வாகனத்தின் முக்கியமான சிறப்பம்சம் என்னவெனில், இதனை பயன்படுத்திவிட்டு 100% மறுசுழற்சி செய்துவிடலாம்.
BMW நிறுவனமானது, இந்த வாகனம் இதற்கு முன்பே பயன்படுத்தப்பட்ட பொருட்களைக்கொண்டு தான் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை மீண்டும் மறுசுழற்சி செய்து வேறு பொருளை தயாரித்துக்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறது. ஐ விஷன் சர்க்குலர் என்னும் இந்த வாகனம் தான் கண்காட்சிக்கு வந்த பார்வையாளர்களை அதிகம் ஈர்த்துள்ளது.