Categories
உலக செய்திகள்

படகுகளில் பயணம் … எதிர்பாராத விபத்து… 12 பேர் பலியான சோகம்…!!

கடலில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தென் அமெரிக்க நாட்டில் கொலம்பியாவின் மேற்குப்பகுதியில் டுமாக்கோ என்ற துறைமுக நகரம் அமைந்துள்ளது. டுமாக்கோ துறைமுக நகரம் அருகில் கடலில் இரண்டு படகுகள் சென்றுகொண்டிருந்தது. பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்பட 50 பேர் இந்த இரண்டு படகுகளிலும் நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று படகுகள் கடலில் கவிழ்ந்துள்ளது. இதனால் 2 படகில் இருந்தவர்களும்  நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் 12 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 35 பேரை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். மேலும் 3 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். படகுகள் விபத்துக்குள்ளான காரணம் பற்றி இன்னும் தெரியவில்லை. ஆனால் இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறப்படுகின்றது.

Categories

Tech |