ஈகுவடார் நாட்டில் இருக்கும் காலபகாஸ் தீவில் டீசலுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஈகுவடார் நாட்டில் இருக்கும் காலபகாஸ் தீவில் ஸ்கூபா டைவிங் செய்யக்கூடிய வீரர்கள் பயணம் மேற்கொள்ளும் சிறிய வகை படகில் 47 பேரல் டீசல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது திடீரென்று படகு கவிழ்ந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டிருக்கிறது.
அதில் பயணம் மேற்கொண்ட 4 நபர்களை பாதுகாப்பாக மீட்டுவிட்டனர். கடலில் கொட்டியா டீசலை அகற்றும் பணியை வீரர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். காலபகாஸ் தேசிய பூங்கா இருக்கக்கூடிய பகுதியில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே, அந்த கழிவுகளால் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் டீசலை அகற்ற திட்டமிடப்பட்டிருக்கிறது.