Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான படகு… 25 நபர்கள் மாயம்…. தீவிரமாக தேடி வரும் மீட்புப்படையினர்…!!!

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 நபர்கள் மாயமானதால், பாதுகாப்பு படையினர் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இந்தோனேசிய நாட்டின் மகஸ்சர் நகரில் அமைந்துள்ள பாவோடிர் எனும் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகில் 42 பேர் பயணித்துள்ளனர். அந்த படகு பங்கஜெனி மாவட்டத்தின் துறைமுகத்திற்கு புறப்பட்டிருக்கிறது. அப்போது ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த படகின் இயந்திரம், மோசமான வானிலை காரணமாக பழுதடைந்தது.

மேலும் உடனடியாக, கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எனவே, இது குறித்து மாகாண அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்பு படையினர் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தற்போது வரை 17 நபர்கள் மீட்கப்பட்டனர். மீதமிருக்கும் 25 நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Categories

Tech |