ஜெர்மனியைச் சேர்ந்த இருவர் இத்தாலிக்கு இயந்திரப்படகில் சுற்றுலா சென்றபோது ஒரு சிறிய படகின் மேல் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
Umberto Garzarella என்ற 37 வயது நபர், ஒரு பெண்ணுடன் படகில் பயணித்துள்ளார். அந்த சமயத்தில் அவர்களின் சிறிய படகின் மீது ஒரு படகு மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் Umbertoவிற்கு வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு பலியானார்.
மேலும் அவரின் அருகில் ஒரு பெண்ணின் ஆடை கிடந்திருக்கிறது. எனவே காவல்துறையினர் ஏரியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அங்கு ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் Greta Nedrotti (25), Umbertoவுடன் படகில் வந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
எனினும் விபத்தை ஏற்படுத்திவிட்டு அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அந்த நபர்களின் படகு சேதமடைந்திருப்பதை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்ததால் மாட்டிக் கொண்டார்கள். அவர்கள் மீது விபத்தை ஏற்படுத்திவிட்டு தெரியப்படுத்தாமல் தப்பியது மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.