நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 43 அகதிகள் பலியான சம்பவம் லிபியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலியின் மேற்கு கடற்கரையில் ஷவையா நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் இருந்து அதிக எண்ணிக்கையிலான அகதிகள் ஒரு படகில் ஏறிச் சென்றுள்ளனர். படகு நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று என்ஜின் பழுதாகியதால் நிலைதடுமாறிய படகு கவிழ்ந்தது. இதில் பயணித்த அகதிகள் கடலில் விழுந்தனர். எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தால் 43 அகதிகள் தண்ணீருக்குள் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் கடலில் நீந்தி உயிர் தப்பினர்.
இதுபோன்ற விபத்துக்கள் இப்பகுதியில் அடிக்கடி நிகழ்வதுண்டு. ஆனால் இந்த ஆண்டு மத்திய தரைக்கடல் பகுதியில் படகு கவிழ்ந்தது இதுவே முதன்முறையாகும். ஐரோப்பிய நாடுகள் அகதிகள் விவகாரத்தில் கடும் கொள்கைகளை கடைபிடித்து வருகின்றது. இதனால் மீட்பு கப்பல் செல்ல முடியாத பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அகதிகள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.