Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக நுழைந்தவர்கள்…. கைது செய்யப்பட்ட தம்பதிகள்…. பறிமுதல் செய்யப்பட்ட படகு….!!

சட்டவிரோதமாக கடத்தலுக்கு பயன்படுத்திய படகினை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பீடி இலை, கடல் அட்டை, விரலிமஞ்சள், வெங்காய விதை போன்ற பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருவதாகவும் சமீபத்தில் ஆட்கள் இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு சட்டவிரோதமாக வருவதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மங்களூர் பகுதியில் காவல்துறையினர் அதிரடியாக 40 பேரை கைது  செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் பிப்ரவரி மாதத்தில் இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு படகில் வந்ததும், மங்களூரிலிருந்து கனடா செல்ல முயன்றதும் தெரிய வந்துள்ளது. மேலும் காவல்துறையினர் சந்தேகப்படும்படியான 27 நபர்களை மதுரையில் பிடித்து  விசாரித்தபோது அவர்களும் இலங்கை – தூத்துக்குடி படகில் வந்தது உறுதியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் மதுரை கியூ பிரிவு காவல்துறையினர் கீழவைப்பார் என்ற இடத்தில் ஒரு தம்பதியினரை கைது செய்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ஸ்டார்வின் என்பதும், இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு படகில் வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அது தூத்துக்குடியில் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மதுரை கியூ பிரிவு காவல்துறை அதிகாரி சண்முகம் தலைமையில் காவல்துறையினர் தூத்துக்குடி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த படகை பறிமுதல் செய்து லாரியில் ஏற்றி மதுரைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Categories

Tech |