இந்தோனேசிய நாட்டின் பாலி நகருக்கு அருகில் சுமார் 271 நபர்கள் பயணித்த படகு தீ பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கீட்டாபாங் நகரத்திற்கு செல்வதற்காக லிம்பர் துறைமுகத்திலிருந்து ஒரு படகு புறப்பட்டு இருக்கிறது. அதில் பயணிகள் 236 பேரும், பணியாளர்கள் 35 பேரும் பயணித்திருக்கிறார்கள். படகு, இந்தோனேசியாவின் பாலி நகரத்திற்கு அருகில் சென்ற போது திடீரென்று படகு தீப்பற்றி எரிந்தது.
எனவே, உடனடியாக பயணிகளை மீட்க 2 கடற்கரை கப்பல்கள் அங்கு விரைந்தது. மீட்பு குழுவினர் மற்றும் மீனவர்கள் சேர்ந்து பயணிகளை மீட்கும் பணியை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.