Categories
தேசிய செய்திகள்

தீவில் சிக்கிய குடும்பங்களுக்கு படகில் சென்று உணவு பொருட்கள் விற்பனை: சேவையை பாராட்டிய மக்கள்!

ஆலப்புழாவில் 50 வயது மதிக்கத்தக்க நபர் படகில் சென்று தனித்தீவில் சிக்கிய குடும்பங்களுக்கு தேவையான உணவு பொருட்கள்,காய்கறிகள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்து வருகிறார். உயிரை பொருட்படுத்தாது இவர் செய்யும் சேவையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில், நாட்டில் உள்ள அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளன.

அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வார சந்தைகள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் கடைகளில் சில சமயம் கூடுவது வழக்கமாக உள்ளது. மேலும், அவ்வாறு அத்தியாவசிய பொருட்களை வாங்கும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் மக்கள் அனாவசியமாக வெளியே செல்வதை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கேரள மாநிலத்தில் ஆலப்புழா பகுதியில் வசித்து வரும் மக்கள் பலர் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்க பல மயில் தூரம் வரவேண்டி இருந்தது. இதனால், மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டனர். இந்த நிலையில், தனது உயிரையும் பொருட்படுத்தாது, படகில் வந்து உணவு பொருட்களை வியாபாரி ஒருவர் விற்பனை செய்து வருகிறார். அவரது சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |