இந்தியாவில் 2022ஆம் ஆண்டு முதல் வங்கிகளில் பணவர்தனைகளில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கான கட்டணம் 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மெட்ரோ நகரங்களில் 3 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும் என்றும் அதற்கு செய்யும் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SBI வங்கி, எச்டிஎப்சி வங்கி போன்றவை அண்மையில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து கனரா வங்கியும் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டியில் சில மாற்றங்களை கொண்டு வந்தது. இந்நிலையில் பேங்க் ஆப் பரோடா வங்கி ரூபாய் 10 லட்சத்துக்கும் அதிகமான செக் பரிவர்த்தனைகளுக்கு பாசிட்டிவ் பே சிஸ்டம் முறையை கொண்டுவந்துள்ளது. இந்த புதிய நடைமுறை நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது. ICICI வங்கி பணத்தினை கடனாகப் பெற்றுக்கொள்பவர்கள் 2.5 % கட்டணத்தை பரிவர்த்தனை கட்டணமாக செலுத்த வேண்டும். அவை 500-க்கு குறையாமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஆட்டோ டெபிட் பரிவர்த்தனைகள் தோல்வியடைந்ததால் அதற்கான அபராத தொகையை உயர்த்தியுள்ளது. அதன்படி 100 ரூபாயில் இருந்து ரூபாய் 250 அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கியான SBI ஐஎம்பிஎஸ் முறையில் பரிவர்த்தனை தொகையை ரூபாய் 2 லட்சத்தில் இருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தியுள்ளது. ரூபாய் 5 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் 20 பிளஸ் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.