பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜூம் நடிகர் பாபி சிம்ஹாவும் மீண்டும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட படங்களில் பிரபல நடிகர் பாபி சிம்ஹா நடித்திருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி பாபி சிம்ஹா நடிப்பில் கன்னடத்தில் வெளியாகியுள்ள “777 சார்லி” என்னும் திரைப்படத்தில் தமிழ் பதிப்பின் வெளியீட்டு உரிமையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் மூலம் கைப்பற்றியுள்ளார். இதேபோல் இப்படத்தின் மலையாள பதிப்பின் வெளியீட்டு உரிமையை நடிகர் பிரதீவ்ராஜ் கைப்பற்றியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.