நெல்லை மண்டல அண்ணா பல்கலைக்கழக டீன் சுரேஷ் மாணவர்களிடம் தமிழ் மொழியை வளர்ப்பதன் அவசியம் குறித்து பேசினார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அப்பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் நெல்லை மண்டல வளாகத்தில் கணித்தமிழ்ப் பேரவை திருவிழா நேற்றையதினம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு நெல்லை மண்டல டீன் சுரேஷ் குமார் என்பவர் தலைமை தாங்கினார். விழாவில் பேசிய அவர்,
மிகவும் தொன்மையான பழமையான மொழி தமிழ். உலகில் உள்ள பல்வேறு மொழிகள் பல்வேறு காலகட்டங்களில் பல மாற்றங்கள் அடைந்து உள்ளனர். ஆனால் இதுவரை மாற்றம் அடையாத ஒரே மொழி தமிழ். தொன்மையான நம் மொழியை நாம் பாதுகாக்க கடமைப்பட்டிருக்கிறோம். நம் தமிழகத்தில் பிறந்த போதிதர்மர் சீனாவிற்குச் சென்று தற்காப்பு கலையுடன் சேர்த்து தமிழையும் பரப்பியதாக வரலாறு கூறுகிறது.
அவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகாபலிபுரத்தில் தான் போதிதர்மர் பிறந்தார். அதனால்தான் மோடி சீன அதிபர் சந்திப்பு அங்கு நடைபெற்றது என்று தெரிவித்தார். மேலும் நமது முன்னோர்கள் இயற்கை வைத்தியத்தையும், பல கலைகளையும் ஓலைச்சுவடியில் குறிப்பாக எழுதி வைத்துச் சென்றுள்ளனர். அவற்றை பாரம்பரியமாக பொக்கிஷமாக நாம் பராமரித்து அதனை டிஜிட்டல் ஸ்கேன் செய்து அதில் உள்ள குறிப்புகளை ஆராய்ச்சி செய்தால் மீண்டும் பழைய தமிழர்களின் தொன்மையையும் அவர்களது சிறப்புகளையும் பின்பற்ற முடியும் என்று அவர் தெரிவித்தார்.