கனடாவில் மேலும் 182 பழங்குடியின குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர செய்துள்ளது.
கனடாவில் சமீபகாலமாக உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. அதாவது பழங்குடியின குழந்தைகள் பயிலக்கூடிய பள்ளியிலிருந்து நூற்றுக்கணக்கில் குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. இவை பழங்காலத்திலிருந்தே பழங்குடியின மக்களின் காணாமல் போன குழந்தைகளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முதலில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள Kamloops என்ற பகுதியில் பழங்குடியின குழந்தைகள் படிக்கும் பள்ளி இருக்கும் இடத்தில் சுமார் 215 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டது. அதனையடுத்து Saskatchewan என்ற பகுதியில் Marieval என்ற இடத்தில் இருக்கும் பள்ளியிலிருந்தும் 751 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டது.
இந்நிலையில், 3 வது முறையாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள Cranbrook என்ற பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தற்போது சுமார் 182 குழந்தைகளின் சடலங்கள் கண்டறியப்பட்டது. இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. புதைக்கப்பட்டிருந்த குழந்தைகள் Ktunaxa என்ற பழங்குடியின குழந்தைகள் என்று கருதப்படுகிறது.
கடந்த 1990ஆம் ஆண்டு வரை பழங்குடியின குழந்தைகள் சுமார் 1,50,000 பேர் கட்டாயமாக 139 பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதில் பல குழந்தைகளை, ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கடுமையாக அடித்து தாக்கியிருக்கிறார்கள். மேலும் அந்த குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்கள்.
அது மட்டுமல்லாமல் பழங்குடியின குழந்தைகளின் மொழி மற்றும் கலாச்சாரத்தை இந்த பள்ளிகள் பறித்துள்ளது. பழங்குடியின குழந்தைகளை இப்படி கொடுமைப்படுத்தும் அளவிற்கு அவர்கள் மேல் என்ன வெறி ? என்று தெரியவில்லை.