உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாரில் உள்ள ஒரு கோவிலில் இரண்டு பூசாரிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சடலங்கள் ஜெகதீஷ் என்ற ரங்கி தாஸ் (55), ஷெர் சிங் அல்லது சேவா தாஸ் (45) ஆகிய இருவர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து கோயிலுக்கு வந்து சடலங்களை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடைகள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீடுகளில் இருந்து வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆங்காங்கே கொள்ளை சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலம் பால்கர்மாவட்டம் கட்சின்சலே கிராமம் அருகே உள்ள தபாடி-கான்வெல் சாலையில் சந்தேகத்தின் பேரில் சென்ற 3 நபர்களை கற்கள் மற்றும் கையில் கிடைத்த பொருட்களை கொண்டும் சரமாரியாக தாக்கினர். திருடன் என்று நினைத்து தாக்கியதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாட்டில் பெரும் விஸ்வரூபம் எடுத்தது.
இந்த நிலையில், இன்று காலை புலந்த்ஷாரில் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலில் உள்ள இரண்டு பூசாரிகளை மர்ம நபர்கள் கொன்று சென்றுள்ளனர். இது குறித்து, காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, ” இரு பூசாரிகளும் ஒரு கூர்மையான ஆயுதத்தைப் கொண்டு கொலை செய்யப்பட்டனர். அதனடிப்படையில் சந்தேக நபர் ஒருவரை அண்டை கிராமத்திலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரு பூசாரிகளிடமும் முராரி என்கிற ராஜு சண்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டுள்ளனர்.