Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

போடு செம!…. வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு….. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் வடிவேலு. இவர் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தை சுராஜ் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஷிவானி நாராயணன் முக்கிய வேடத்தில் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படம் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் வடிவேலு குரலில் வெளியான அப்பத்தா பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.  இந்நிலையில் படத்தின் டிரைலர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் ரசிகர்களை கவர்ந்து தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இப்படம் டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

Categories

Tech |