தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி போன்ற பாடல்கள் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்,
#varisu audio launch 24dec Nehru Indoor stadium 💫 GET READY TO ROAR🔥#thalapathy #Thalapaathy67@actorvijay #VarisuAudioLaunch pic.twitter.com/NgaPivHXxh
— ᴍᴏʜ ʀᴀᴢʏ (@mraziii7) December 12, 2022