Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. ஜி.பி முத்துவிற்கு அடித்த ஜாக்பாட்…. நடிகர் அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு….!!!

அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதாக ஜி.பி முத்து தெரிவித்துள்ளார்.

ஜி. பி முத்து யூடியூப் மற்றும் டிக் டாக் மூலம் பிரபலமானவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் முதல் நபராக நுழைந்தவர். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். இவர் இந்த பிக்பாஸ் வீட்டில் இரு வாரங்கள் மட்டுமே இருந்தார். தனது மகன்களை பார்க்க வேண்டும் என பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜி.பி. முத்துவிற்கு அடித்த அதிர்ஷ்டம்.. முன்னணி நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு | Bigg Boss Gp Muthu To Act With Ajith

இதனயடுத்து, இவர் சன்னி லியோனுடன் ”OMG” திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜி.பி முத்துவுக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. அதன்படி, இவருக்கு  நடிகர் அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்திருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்து இருக்கிறார். இதனால் இவரின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |