தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லவ் டுடே’. இந்த படத்தில் கதாநாயகனாக பிரதிப் ரங்கநாதன் நடித்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, இவானா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கல்பாத்தி நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டுள்ளது.
இந்த திரைப்படம் முதல் நாளில் 2.5 கோடி வசூலித்ததாகவும் இரண்டு நாட்களில் 5 கோடி வசூலித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படம் தற்போது 50 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளதாக சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது.