Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி?…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயின் ஆக நடிக்க அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் ஆகிறது. கடந்த 2011-ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் மற்றும் அர்ஜுன் கூட்டணியில் மங்காத்தா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆன நிலையில் தற்போதும் அஜித் ரசிகர்கள் மங்காத்தா திரைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

இப்படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிக்க, அர்ஜுன் போலீஸ் ஆபீஸராக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் அஜித் மற்றும் நடிகர் அர்ஜூன் சேர்ந்து எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மங்காத்தா 2 கூட்டணி மீண்டும் இணையப் போகிறதா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் வெங்கட் பிரபு மங்காத்தா 2 திரைப்படத்தை இயக்குவதற்கு தான் ரெடியாக இருப்பதாகவும் விஜய் மற்றும் அஜித் கதைக்கு ஓகே சொன்னால் போதும் என்றும் பேட்டிகளில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |