‘வாத்தி” படத்தின் அசத்தலான முதல் பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ”வாத்தி”.
இந்த படத்தை தயாரிப்பாளர் நாகவம்சி தயாரிக்கிறார். இந்த திரைப்படம் தெலுங்கு மொழியிலும் ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு தமிழில் வாத்தி எனவும் தெலுங்கில் சார் எனவும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து, இந்த படத்தின் முதல் பாடல் ‘வா வாத்தி’ வரும் நவம்பர் 10ம் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்தது. இந்நிலையில், இந்த படத்தின் அசத்தலான முதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
Here is #VaaVaathi from #vaathi
▶️ https://t.co/5XayjqZWly@dhanushkraja #VenkyAtluri @ramjowrites @_ShwetaMohan_ @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya @Fortune4Cinemas @SitharaEnts #SrikaraStudios @adityamusic
— G.V.Prakash Kumar (@gvprakash) November 10, 2022