Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. வசூல் வேட்டை நடத்தும் ”பொன்னியின் செல்வன்” திரைப்படம்…. இத்தனை கோடியா….?

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இதுவரை செய்த வசூல் சாதனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி ரிலீசான திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யாராய் மற்றும் பலர் நடித்திருந்தனர். கல்கி நாவலை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது.

சர்ச்சையை மீறி சாதித்த 'பொன்னியின் செல்வன்' - மீண்டும் உயிர் பெறும்  சரித்திரப் படங்கள் | Ponniyin Selvan: Mani Ratnam's epic drama fires up  India box office - hindutamil.in

இந்த படத்திற்குப் பிறகு நிறைய படங்கள் ரிலீசான நிலையிலும் இன்றும் பல திரையரங்கில் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டுள்ளது. இந்நிலையில், கடந்த  30ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் இதுவரை செய்த வசூல் சாதனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இதுவரை இந்த திரைப்படம் சுமார் 500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் இந்த படம் 240 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |