செக்ஸ் பொம்மையை திருமணம் செய்துகொண்ட பாடிபில்டர் பொம்மை உடைந்ததால் வேதனையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த பாடிபில்டர் யூரி டொலோச்கோ. இவர் செக்ஸ் பொம்மையை திருமணம் செய்ய முடிவு செய்து 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மார்கோ என்ற பொம்மை இடம் தனது காதலைத் தெரிவித்தார். பின்னர் இருவரும் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக திருமணம் தடைப்பட்டது. பின்னர் அக்டோபர் மாதத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மீண்டும் திருமணம் தள்ளிப்போனது.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு நவம்பர் மாதம் அனைவர் முன்னிலையிலும் மார்க்கோ பொம்மையை யூரி டொலோச்கோ மணந்து கொண்டார். இந்த செய்தி உலக அளவில் மிகவும் பிரபலமானது. திருமணம் முடிந்து சுமார் ஒரு மாதகாலம் ஆகியுள்ள நிலையில் பொம்மை திடீரென உடைந்து விட்டதால் யூரி டொலோச்கோ வேதனையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பொம்மையை சரி செய்வதற்காக கொடுத்திருப்பதாகவும் மார்கோ நலமுடன் திரும்ப வேண்டும் என கூறி விருப்பம் தெரிவித்துள்ளார். மார்கோ குறித்து பேசியபோது: “அவளால் தானாக நடக்க முடியாது. யாராவது உதவி செய்ய வேண்டும். அவளுக்கு சமைக்க தெரியாது. ஆனால் ஜார்ஜியா உணவுகள் மிகவும் பிடிக்கும். அவளுக்கு பிடித்த உணவு கிங்கிலி. அவளுக்கு ஒரு மெல்லிய மனம் இருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.