Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடல் ”வலிமையை உண்டாக்கும்” தினை காரப் பணியாரம்..!!

தேவையான பொருள்கள்..

திணை அரிசி  –    500 கிராம்

உளுந்து      –      250 கிராம்

வெந்தயம்   –   3 தேக்கரண்டி

உப்பு      –      தேவையான அளவு

கடுகு     –        ஒரு தேக்கரண்டி

சீரகம்      –       ஒரு தேக்கரண்டி

சின்னவெங்காயம்     –     250 கிராம்

மிளகாய்        –           4

எண்ணெய்     –      தேவையான அளவு

கருவேப்பிலை     –    தேவையான அளவு

சீரகம்         –         ஒரு தேக்கரண்டி

செய்முறை..

தினை அரிசி, உளுந்து, வெந்தயம், முதலியவற்றை மூன்று மணி நேரம் ஊறவைத்து நன்றாகப் பதமாக அரைக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து .ஆறு முதல் எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும். சிறிதளவு எண்ணெயைச் சூடாக்கி. கடுகு, சீரகம், மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலையைத் தாளித்து. புளித்த மாவுடன் சேர்த்துக் கலக்கவும். பணியாரச் சட்டியில் எண்ணெயைத் தடவி. கலந்த மாவை ஊற்றி வேகவைத்து எடுக்கவும். கடலைத் துவையல், புதினாத் துவையல், தேங்காய்ச் சட்டினி, தக்காளி சட்னியுடன், சேர்த்து சாப்பிட சுவையாகவும் சத்தாகவும் இருக்கும். தினை காரப் பணியாரம் தயார்.

 

Categories

Tech |