Categories
உலக செய்திகள்

திடீர்னு அந்த சத்தம் மட்டும் கேட்டுச்சு..! போலீஸால் மீட்கப்பட்ட சடலம்… அக்கம்பக்கத்தினர் பரபரப்பு தகவல்..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டுபேண்டோர்ப்பி என்னும் பகுதியில் ஆண் ஒருவருடைய சடலம் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள டுபேண்டோர்ப்பி என்னும் நகரில் 58 வயது பெண் ஒருவர் பலத்த காயங்களுடனும், 59 வயது ஆண் ஒருவர் சடலமாகவும் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இருவரையும் மீட்டுள்ளனர். இந்நிலையில் மீட்கப்பட்ட இருவருடைய உடலிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளதாக சூரிச் மாநில காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். காவல் துறையினருக்கு இரவு 8.30 மணிக்கு இந்த தகவல் கிடைத்துள்ள நிலையில் முழு விசாரணைக்கு பின்னரே என்ன நடந்தது என்பது குறித்த தகவல் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் இருவருக்கும் பிள்ளைகள் இல்லை என்றும், அவர்கள் இருவரும் அதீத அன்புடன் நடந்து கொள்வார்கள் என்றும் அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் திடீரென நடந்த இந்த சம்பவமானது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளனர். கடந்த சனிக்கிழமை அன்று இரவு திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதாகவும், அதன் பிறகு அந்த நகரமே அமைதியாக காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறியுள்ளனர். மேலும் துப்பாக்கி குண்டு பாய்ந்து மரணமடைந்த அந்த ஆண் தனக்கு விருப்பமான பாடல் ஒன்றை சமூக ஊடக பக்கத்தில் இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாக பகிர்ந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |