வாய்க்காலில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பழையகோட்டை சாலை நாட்டார் பாளையம் பிரிவு அருகே பி.ஏ.பி வாய்க்கால் சென்று கொண்டிருக்கிறது. இந்த வாய்க்காலில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் மிதந்து வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காங்கேயம் காவல்துறையினருக்கு இது குறித்த தகவல் தெரிவித்து விட்டனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்தவரின் விபரம் குறித்தும், அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.