ஜெனீவா ஏரியில் மிதந்த முதியவரின் சடலம் மீட்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜெனீவாவின் ரோல் துறைமுகத்திற்கு அருகே ஒரு நபரின் உடல் மிதந்துள்ளது. இதனை அந்த வழியாக சென்ற நபர் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் 73 வயதுள்ள அந்த நபர், அவரின் படகை சவாரிக்காக தயார் செய்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது நிலைதடுமாறி அவர் தண்ணீரில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். மேலும் அந்த நபரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து அவர் குறித்த விவரங்கள் தெரிந்தவுடன் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.