Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவால்… தீவிரப்படுத்தப்பட்ட சோதனை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா உத்தரவின்படி பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று களப்பணியாளர்கள் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து வருகின்றனர். அதேபோல் சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனையை கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கொரோனா தொற்றின் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல், இருமல், தொண்டை வலி, தலை வலி, நாக்கு சுவையின்மை, உடல் வலி, மூக்கு மணமின்மை, தும்மல் ஆகியவை இருந்தால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

Categories

Tech |